இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் .
இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13,490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், ரிக்கி பொன்டிங் 13, 704 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
சனத் ஜயசூரிய 13,430 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும் மஹேல ஜயவர்தன 12 472 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் 10 இடங்களில் உள்ளவர்கள் பட்டியல்!



0 Comments