சிலாபம் - கொழும்பு தனியார் வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (27) காலை தொடக்கம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் மற்றும் சிலாபம் - கொழும்பு பஸ் ஊழியர்கள் இடையே நேற்று (26) கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த பணிநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் தனியார் பஸ்கள் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தே இப்பிரச்சினை ஏற்பட்டது.
ஆனால் சொகுசு மற்றும் இபோச பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments