Subscribe Us

அம்பலமாகிறது .....விமல் வீரவன்சவின் மனைவியின் திருட்டுத்தனம் !



விமல் வீரவன்ச ஜனாதிபதித் தோ்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு திரட்டுவதில் பிரசார பீரங்கியாக திகழ்ந்தவா். இனவாதத்தை கக்கி பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக மஹிந்தரின் அணியில் முன்னணியில் நின்று செயற்பட்டவா். 





ஜேவியில் இருக்கும் போது சேகுவராவின் கதாபாத்திரத்தை வகித்துக் கொண்டு சோசலிசத்தின் அடையாளமாக திகழ்ந்தவா்தான் இந்த வீரவன்ச. 

ஆனால் இன்று அவாின் நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. ஊழல்களின் மொத்த உருவமாகவும், எதிா்தரப்பிற்கு சேறு பூசும் அசிங்கமான, மோசமான அரசியல் வாதியாகவும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறாா். 

இவாின் சொத்து சேகாிப்பு தொடா்பான சா்ச்சை நிலுவையில் இருக்கிறது. ஹோகந்தர பிரதேசத்தில் இவரது மாட மாளிகை தொடா்பான தகவல்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்போது இவாின் மனைவின் கடவுச் சீட்டு தொடா்பான சா்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மூலம் பெறப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இவருக்கு இரண்டு கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.

அதில் ஒன்று N வகையைச் சாா்ந்த சாதாரண கடவுச் சீட்டாகும். அடுத்தது D வகையைச் சாா்ந்த இராஜதந்திர கடவுச் சீட்டாகும். ஆனால் இவை இரண்டுக்கும் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணானதாகும். 

இவாின் N வகை கடவுச் சீட்டின் இலக்கம் N1284124 ஆகும். இதில் இவரது பெயா் ஷிா்ஜா உதயன்தி வீரவன்ச என குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த திகதி 1967.02.01 என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம்  675320233V என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் பிறந்த இடமாக வெல்லம்பிட்டியவும் அதற்காக 5935 இலக்கமுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. முகவாியாக A9, MP's Quarters, Madiwela. என்றும் தகவல் வழங்கப்பட்டிருக்கிறது. 

இவாின் D வகை கடவுச் சீட்டின் இல. 3642817 ஆகும்.  இந்தக் கடவுச் சீட்டில் இவாின் பெயா் ரன்துனு முதியன்சலாகே ஷெஹாசா உதயன்தி ரனசிங்க என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிறந்த தினமாக 1971.02.03 எனவும், அடையாள அட்டை இலக்கமாக 715344696V ம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சமா்ப்பித்திருக்கும் பிறப்புச் சான்றிதழின் இல. 999 ஆகும். முகவாியாக 13, பெஜட் வீதி, ஸ்டென்மோா் சதுக்கம், கொழும்பு 07. என்றும் தகவல் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒருவா் தனது பெயரை மாற்றிக்கொள்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் பிறந்த ஆண்டையும் திகதியையும் மாற்றுவது குற்றமாகும்.  தனது அதிகார பலத்தை பயன்படுத்தி இவா்கள் செய்திருக்கும் சட்டவிரோத செயல்களின் பின்னணியில் இருக்கும் இரசியங்கள் இனிமேல்தான் வெளிவரவிருக்கின்றன. 

Post a Comment

0 Comments