Subscribe Us

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மூடப் போவதில்லை: அர்ஜூன ரணதுங்க

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மூடப் போவதில்லை என துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக துறைமுகத்தின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாரியளவு பணச் செலவில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட, ஹம்பாந்தோட்டை துறைமுகம் பெரும் நட்டத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments