Subscribe Us

வாயில் இருந்த சுவிங்கத்தை, கையில் எடுத்து, திரும்பவும் வாயில் போட்டுக்கொண்ட ஒபாமா..!

இந்தியாவின் 66-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழால் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். அதற்காக அவர் தனது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் வந்து இந்தியாவில் தங்கி உள்ளார்

இன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டு இந்திய ராணூவ் அணிவகுப்பை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் டேங்கர்களும், ஹெலிகாப்டர்கள் ஏனைய போர் தளவாடங்களும் அணிவகுப்பு நடந்தது.இந்த அணிவகுப்பு சுமார் 2 மணி நேரம்  நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி அருகே அமர்ந்திருந்த ஒபாமா சுயீங் கம் மென்று கொண்டிருந்தார்.

அவர் சூயிங் கம்மை கையில் எடுத்துவிட்டு திரும்பவும் வாயில் இட்டுக்கொண்டது விளையாட்டாக இருந்தது . இது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக ட்விட்டர் வலைத்தளத்தில் ஒபாமா சூவிங் கம் மென்றது தொடர்பான டுவிட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Post a Comment

0 Comments