ஜனாதிபதி தேர்தலுக்காக மூடப்பட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் மூடப்பட்டது.
ஜனாதிபதி தேரதல் நடவடிக்கைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை கல்வி பொதுத்த தராதர சதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றும் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸார் தங்கியிருக்கும் பாடசாலைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


0 Comments