முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மகள் நாமல் ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட  68000 சுவர் கடிகாரங்கள் சபுகஸ்கந்தயில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை துறைமுக அதிகாரி ஒருவரினால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு வாங்கப்பட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இக்கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.