பைஷல் இஸ்மாயில் –
கடந்த 12 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை இன்று (20) திகதி காலை 9.30 மணியளவில் கூடியது.
தவிசாளர் ஆரியபதி கலபெத்தி தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் ஆளும்தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வதை்தனர்.
இரு தரப்பினரும் தெரிவித்த கருத்தாவது,
இந்த அமர்வில் எவ்வித தீர்வு எட்டப்படாத நிலைமையே அதிகம் காணப்படுகின்றது. அதனால் இந்த சபை நடவடிக்கைகளை வேறு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு ஆளும்தரப்பினரும் எதிர் தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை தவிசாளர் ஆரியபதி கலபெத்தியிடம் முன்வைத்தனர்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர்களாக இருக்கின்ற சில உறுப்பினர்களின் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பை உடனடியாக வழங்க தவிசாளர் அவர்கள் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தவிசாளர் ஆரியபதி கலபெத்தி சபையின் நடவடி க்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





0 Comments