தமக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றால் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாரிய பணி நிறுத்த போராட்டத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்று நிறைவுகாண் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த சபை அறிவித்துள்ளது.
அரச மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் ஜானக நிஷான்த தெரிவித்தார்.
இந்த நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்திற்கு 14 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ள தயாரக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.