Subscribe Us

header ads

புத்தளம் தில்லையடி கிராமத்தில் உதித்த புதிய 'சூரியன்'

புத்தளம் தில்லையடி ‘சூரியன்’ கிராம செயற்பாட்டுக் குழு (Village Action Team – VAT) அலுவலகம் 2014.09.28-ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
WODEPT நிறுவனத்துடன் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட தில்லையடி ‘சூரியன்’ VAT அலுவலகத்தை புத்தளம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சாந்திலதா, WODEPT நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ் இருவரும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு திறந்துவைத்தனர். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தில்லையடி கிராம அதிகாரி எம்.எம். மிப்ராஸ் சமூகமளித்திருந்தார். சிறுவர் கழக அங்கத்தவர்கள் 115 பேர் உட்பட, இளைஞர்கள் பெரியவர்கள் 60 பேர் வரை கலந்துகொண்டனர்.


1. சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாடு,
2. போதைவஸ்து, மதுபானம், புகைத்தல் (தவிர்த்தல்) அபிவிருத்தி,
3. பெண்கள் வலுவூட்டல் ஆகிய பணிகளை கிராம மட்டங்களில் முன்னெடுப்பதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்படும் கிராம செயற்பாட்டுக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு மேற்படி தலைப்புக்களில் தொடரான அறிவூட்டல், பயிற்சி, வழிகாட்டல்களையும் தேவைப்படும் அடிப்படை வசதிகளையும் WODEPT நிறுவனம் வழங்குகின்றது.

தில்லையடி ‘சூரியன்’ VAT போன்று புத்தளம், முந்தல், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுகளிலும் VAT-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இச் செயற்றிட்டங்கள் WODEPT பணிப்பாளர் டி.எல்.எம். மகீனின் மேற்பார்வையின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன.

‘சூரியன்’ VAT-ன் கீழ் சிறுவர்களை மையப்படுத்தி இயங்கும் 4 சிறுவர் கழகங்களில் சுமார் 200 வரை சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களைச் சேர்ந்த, நான்கு சமயத்தையும் பின்பற்றும் சிறுவர்கள் அங்கத்துவம் வகிக்கிப்பதுடன் சிங்களம் தமிழ் இருமொழி மூலம் சிறுவர் கழக நடவடிக்கைகள் நடைபெறுவதும் சிறுவர் மனங்களில் விதைக்கப்படும் ஒற்றுமைப் பண்பும் இதன் சிறப்பம்சங்களாகும்.

2011-ல் 9 உறுப்பினர்களுடன் உருவான ‘சூரியன்’ VAT 2014-ல் 19 உறுப்பினர்களுடன் செயல்படுகின்றது. எம்.எப்.எப். சுபியானி WODEPT கள உத்தியோகராகவும் எஸ். புஷ்பராணி தொண்டர் அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.

நன்றி: The Puttalam Times





Post a Comment

0 Comments