Subscribe Us

header ads

”ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிப்பது தொடர்பாக ஆராய்வு’என்று வெளிவந்த செய்திக்கு மறுப்பு!


 'லங்கா புவத்' என்ற இணையத்தளத்தில் 29 ஆம் திகதி பிற்பகல் 'ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய முஸ்லிம் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை கூடுகிறது' என்ற தலைப்பில் என்னைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எந்த உண்மையுமில்லை. 
'நாங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி அளித்துள்ள ஆதரவை மதிப்பீடு செய்து ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் வழிவகைகளை ஆராய்வோம்' என நான் கூறியதாக  இந்தச் செய்தி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
அத்துடன், ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் அரசாங்கத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை தகர்ப்பதற்கு வெளிச்சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பற்றி ஆராயப்படுமென்று நான் கூறியதாகவும் அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இவற்றை நான் கூறவில்லை. அவ்வாறு தெரிவிப்பதற்கான அதிகாரம் எனக்கில்லை. நான் நீதியமைச்சரின் ஊடகச் செயலாளராகவும் அதேவேளையில் அவர் அரசியலில் பிரவேசித்ததிலிருந்து அவரது ஊடக ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறேன். 
இந்த மறுப்பை நான் சம்பந்தப்பட்ட இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ளேன். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்-

Post a Comment

0 Comments