Subscribe Us

header ads

பிரான்ஸில் ஞானசாரரின் காதலி - அமைச்சர் மேர்வின் சில்வா தகவல்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரின் காதலி பிரான்ஸில் வசிப்பதாகவும் அவருக்கு இந்த தேரர் ராஜகிரியவில் வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
என்னை விமர்சிக்கும் நபர்கள் சிலருக்கு பிரான்ஸில் பெண்கள் உள்ளனர். அவ்வாறுதான் ஞானசார தேரரும் பிரான்ஸில் பெண்ணொருவரை வைத்துக் கொண்டுள்ளார். அன்றொரு நாள் மேடையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினையும் அவருக்கு நான் ஞாகப்படுத்துகிறேன். அவர் ஒரு இருதலைப் பாம்பு.
மனிதன், குடும்பம் என்ற சமூக வலையமைப்பைச் சேர்ந்த ஒரு நபரல்ல அவர். சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் அவரது நிலைமை என்ன என்பது அவருக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும். யுத்த காலத்தில் அவர் நாட்டுக்காக என்ன செய்தார் என்றும் அமைச்சர் மேர்வின் கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: (தமிழில்) ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
-AsM-

Post a Comment

0 Comments