Subscribe Us

நாமல் ராஜ பக்ஸ சிரிமாவோ பாலிகா வித்தியாலய மணவிகளினதும், ஆசிரியர்களினதும் எதிர்ப்புகளுக்கு ஆளானார்". அதன் மேலும் விவரங்கள்

சென்ற வாரம் ராவய பேப்பரின் பிரதான தலைப்பு செய்தியாக வந்த '' நாமல் ராஜபக்ஷ சிரிமாவோ பாலிகா வித்தியாலயத்திற்கு சென்ற" விடயம் முன் வைக்கப்பட்டது. அதன் மேலும் விவரங்கள் இம்முறை ராவயவில் திசரணி குண்சேகரவும், ராவய செய்தி ஆசிரியர் லசந்த ருகுண்கே யும் எழுதியுள்ளனர். குறிப்பிட்ட தினத்தில் நாமல் ராஜபக்ஷ உடன் சேர்ந்து கால்டன் ரக்பி போட்டிகள் பற்றிய விளம்பரம் செய்வதற்காக  கொழும்பிலுள்ள 3 பிரதான தேசிய பாடசாலைகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர். டீ எஸ் செனானாயக, விஸாகா வித்தியாலயம், சிரிமாவோ பாலிகா வித்தியாலயம். அதில் மற்ற இரண்டு பாடசாலைகளும் இவர்களது நிகழ்ச்சியை இட்டு அமைதி காத்தாலும் சிரிமாவோ பாலிகா வித்தியாலய அதிபர் தவிர்ந்த ஆசிரியர்களும், விசேசமாக மாணவ தலைவிகளும் எதிர்ப்பு தெரிவிக்க காரணமாக அமைந்த  இராஜ் வீரரத்ன என்ற பாடகன் பாடி மாணவிகளை நடனமாடுமாறு தூண்டிய  பாடல் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கத்தை தருகிறேன். ஏனைய செய்திகள் பிறகு எதிர்பாருங்கள்.
( இந்த இராஜ் வீரரத்ன சிறிது காலத்திற்கு முன்பு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இறுவட்டு ஒன்றை வெளியிட்டான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது)

பாருங்கள் பாடலின் கருத்தை........
கறுப்பு நோட்டி குட்டி எனது ஸ்வீட் மாணிக்கம்
 நான் இதோ வருகிறேன் உம்மா (முத்தம்) உம்மா (முத்தம்) வேண்டும்
 நீ இல்லாத நாடு ருசியாக இல்லை நோனே
எனது மடிக்குள் பாய்ந்து கொள்
எனது நெஞ்சமெல்லாம் தீ போன்று உள்ளது
 நான் மிச்சம் ஹென்ட்ஸம் நோனே
ரோமியோ ஜுலியட் போல
 நாங்கள் இருவரும்.... ஆ... ஆ.......ஆ....
எனது கறுப்பு குட்டியே அன்பின் தளிரே
 நீ எனது உயிரென்று எண்ணினேன்
பூ போன்ற புன்னகை பொங்குகிறது கண்ணில்
உலகத்துக்கு தெரியாமல் சுகத்தினுள் இரு

ஆ எங்கே பெருனால் கிஸ்
இந்த மிஸ்ஸிடம் இல்லை மோதிரம்
வருவாயா எனது மார்பினில்  சொத்தே
ஜாதகம் பார்த்து தயாரிப்போம் மணவறையை
இகிபிச்சி கொழுத்த புட்டு
சாரி உடுத்தி காப்பு அணிந்து
ஸ்வீட் மாணிக்கம் ஆடுதடா
கையைப் பிடித்து கொடுத்தேன் முத்தம்
கரியைப் போன்று அண்மித்த நிறமாம்
அதை விட எனது மாணிக்கம் வெள்ளையாம்
எனக்கு பொறுத்தமான நல்ல நிறம் மா நிறம்
 நான் பாடுவது விரிது.

(மன்னிக்க வேண்டும் அன்பர்களே. இதுதான் அந்த கண்ராவி பாடல். இதற்கு நாமல் ராஜபக்ஷவும் ஆடினாராம். ஒரு சில மாணவிகள் அட்டம் போட துவங்கியதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு இடை நடுவில் இருவரும் ஸ்கேப் ஆகி உள்ளனர். தற்போது எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்களும் மாணவ தலைவிகளும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அச்சுருத்தல்கள் விடுக்கப் படுவதாக ராவய செய்தி கூறுகிறது)
(இங்கே பதிவிடப்பட்டுள்ள போட்டோ விசாகா வித்தியாலய மாணவிகள் போட்ட கூத்து. இது இராஜ் வீரரத்ன தனது முக நூலில் பதிவேற்றியது.)

தமிழில்: எம. எல் ஹாஜா சஹாப்தீன்

Post a Comment

0 Comments