Subscribe Us

கத்தாரில் உதயமான கற்பிட்டி "ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் - கத்தார்".

கத்தார் வாழ் க/ ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்று கூடல் கத்தார் மைதரில் 09/08/2014 நேற்று நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஒன்று கூடலில் 6 ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்களும் 2 கற்பிட்டி சகோதரர்களும் கலந்து கொண்டனர். 

இந்த ஒன்று கூடலில் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி இஸ்தாபகர் மற்றும் உஸ்தாத் மார்களை நினைவுகூர்ந்தமுறையில்ஆரம்பமானது.

இந்நிகழ்வில்  கத்தார் வாழ் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவரும், செயலாளரும் கூடத்திற்கு வருகை தந்தோரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்; மௌலவி ஜனீர் ஹமீட் ( கத்தார், இலங்கை தூதரகம்  - ஊழியர் விவகார பிரிவு அதிகாரி)

செயலாளர் ; மௌலவி ஷியாம் நஸீர் (PRO Simex Trading Company WLL) 
தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் கத்தார் வாழ் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புக்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு மிக முக்கியமாக எம்மை உருவாக்கிய ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி தட்போதைய கல்வித்தரம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன
இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை யில் பொதுக்கூட்டம் கூடுதல் என தீர்மாநிகபட்டது.


சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடை பெற்ற மேற்படி கூட்டம் துஆ வுடன் நிறைவு பெற்றது.
அல்லாஹ் எமது ஒன்று கூடலை பொருந்திக்கொள்வானாக.

அன்பின் கற்பிட்டி நண்பர்களே, ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்களே உங்களது கருத்தகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம். 
ஜெசகுமுள்ளஹு ஹைரா.


 பி. கு: ஒன்று கூடல் புகைப்படங்கள் வெளியிட விரும்பவில்லை.

ஷியாம் நஸீர்,
செயலாளர்,
ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் - கத்தார்

Post a Comment

0 Comments