Subscribe Us

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பேராளர் மாநாடு



ரூசி சனூன் புத்தளம்.
நாட்டை பாதுகாக்கும் நீல காவலரன் எனும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பேராளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (10) மாலை புத்தளம் நகர  மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும், புத்தளம் நகர முதல்வருமான கே. ஏ. பாயிஸ் மற்றும் கல்பிட்டி தொகுதி அமைப்பாளரும், தென்னை தோட்ட பிரதி அமைச்சருமான விக்டர் அன்டனி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் கல்பிட்டி பிரதேசங்களில் இருந்து பெருந்தொகையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தாவரவியல், பொழுதுபோக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத், சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர்களான சிந்தக அமல் மாயாதுன்ன, என்.டி. எம். தாஹீர் உள்ளிட்ட நகர சபை,  பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புத்தளம் நகர கலா  மன்றங்களின் மாணவ, மாணவிகளுடைய கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. 
நனறி: Puttalam online
DSC04162DSC04164DSC04165 DSC04171 DSC04179

Post a Comment

0 Comments