-எஸ்.ஏ.எஸ்.நிஹார்-
பள்ளிவாசல் விதிமுறைகளுக்கு முரணாக
நடந்துகொண்ட கொண்டதாக கூறப்படும் நபரொருவரை பள்ளிவாசல் நிர்வாகம்
ஊரைவிட்டுக் நீக்கி வைத்துள்ளதுடன் அவருடன் கொடுக்கல் வாங்கல்
செய்யக்கூடாது என்றும் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று
புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் பகுதியிலுள்ள குறிஞ்சாலெட்டை என்னும் கிராமத்தில் இது இடம்பெற்றது.
இதேவேளை, ஒதுக்கி வைக்கப்பட்டவரின்
வீட்டுக்குச்சென்ற ஏழு பேரடங்கிய ஆண்கள்,பெண்கள் அடங்கிய குழுவொன்று அவரது
வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தாக கற்பிட்டிபொலிஸாரால்
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தள மாவட்ட பதில் நீதவான் எம்.எச்.இக்பால்
முன்னிலையில் ஞாயிறன்று (27-07-2014 )ஆஜர் செய்யப்பட்டபோது தலா 50ஆயிரம் ரூபாய்
சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த பதில் நீதவான், எதிர்வரும் முதலாம் திகதி
நீதிமன்றதில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். (மெட்ரோ நியூஸ்


0 Comments