Subscribe Us

ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS ) போராளிகள் வெளியிட்டுள்ள வரைபடம். அடுத்த ஐந்தாண்டுகளில் கைப்பற்ற உள்ள நாடுகள். (இலங்கை உட்பட)

ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS ) அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.

இதில் ஈராக் முழுவதையும்,தாங்கள் கைப்பற்றியதன் பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு திட்டம் தயாராகி வெளியாகியுள்ளமை உலக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ் வரைபடத்தில், ஈராக் மட்டுமன்றி, ஆப்பிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், மியான்மர்,மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் கறுப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளதுடன் இக் கறுப்பு நிறப் பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக ISIS அமைப்பினால் தெரிவிக்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் கற்பிட்டியின் குரலுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

ISIS Map - 5 Year Plan

Post a Comment

0 Comments