பிரித்தானியாவில் சிறுவன் ஒருவன், தொட்டால் புன்னாக மாறும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான். பிரித்தானியாவின் பிர்மிங்கம் நகரை சேர்ந்த மேசன் கிராஸ்லீ என்ற சிறுவன் recessive dystrophic epidermolysis bullosa என்ற அரிய நோயால் பாதிக்கபட்டுள்ளார். மரபு குறைபாட்டால் ஏற்பட்ட இந்த நோய், லேசாக தொட்டால் கூட இவரை பெரும் காயத்துடனும், வலியுடனும் அவதிப்பட வைக்கின்றது. மேசன் தனது இரு கைகளையும் தேய்த்தால் கூட காயமாக மாறிவிடுகிறது.

  
இந்நிலையில் தற்போது மேசன் ஆடை மாற்றி கொள்ளும் போதும், குளிக்கும் போதும் உடம்பில் ஏற்படும் சிறு அடிகள் இவரின் உடம்பை சிவப்பாக மாற்றிவிடுகிறது. மேலும் மேசன் கீழே விழுந்தாலும், கண்களை லேசாக நசிக்கினாலும் கூட வேதனை தான். இதுகுறித்து மேசன் தந்தை மைல்ஸ் கூறுகையில், மேசனை பட்டாம் பூச்சி போல் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த நோய் இருப்பது அறிந்தவுடன் எனது உலகமே அழிந்தது போல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது 5000 நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் 17,000 மக்களில் ஒருவருக்கு வர வாய்ப்புள்ளது. தற்போது மேசனின் தாய் சமந்தா மற்றும் தந்தை மைல்ஸ் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நிகழ்ச்சிகள் நடத்தி இந்த நோயை பற்றி கண்டறியும் ஆய்வுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.