Subscribe Us

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்

பனிச்சறுக்கலின்போது படுகாயமடைந்தபின் பல மாதங்களாக  கோமா நிலையலிருந்த மைக்கல் ஷூமாக்கர், கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர்  கடந்த டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது தலையில் படுகாயமடைந்தார்.

செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 6 மாதங்காக பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் கோமா நிலையில்  சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடதக்கது.



 

Post a Comment

0 Comments