இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3
ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ஒருநாள் போட்டிக்கு ஏ.பி. டிவில்லியர்ஸ{ம் டெஸ்ட் போட்டிக்கு ஹசிம் அம்லாவும் தலைமை தாங்கவுள்ளனர்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 6 ஆம் திகதி
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 9
ஆம் திகதி பகலிரவு போட்டியாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்திலும் 3 ஆவது
ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ
சர்வதேசமைதானத்திலும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 16 ஆம்திகதி காலியிலும் 2 ஆவது
டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 24 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி.
மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டிவில்லியர்ஸ்,
இலங்கை அணியை அதன் சொந்த இடத்தில் வைத்து வெல்வது மிகவும் கடினமானது.
அனைத்து வகையான செயற்பாடுகளிலும் குறிப்பாக, ஒருநாள் மற்றும் இருபதுக்கு -
20 போட்டிகளில் மிகவும் ஆபத்தான அணி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை அணியின் செயற்பாடுகள் மிகவும் முன்னேற்றகரமாக கணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் கற்பிட்டியின் குரலுக்கு வாருங்கள். எங்கள் Facebookமற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.


0 Comments