முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் ஜாதிக பலசேனாவின் தலைவரான வட்டரக்க விஜித தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று
நண்கபல் வைத்தியசாலையிலிருந்து வெளியானர். இதனையடுத்து கொழும்பு
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
தன் மீது தானாகவே தாக்கிக் கொண்டு இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக
பொலிஸ் முறைப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இன்று நண்பகல் இவர்
கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இவர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது ஜுலை 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டார். இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹியங்கனை
பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments