Subscribe Us

அண்மைய இனவன்முறையின் போது முஸ்லிம் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கள மக்கள்

அளுத்கமை பிதேசத்தில் நடைபெற்ற இனமுரண்பாட்டினால் அதனைச் சுற்றியுள்ள தர்ஹா நகர், பேருவளை, வல்பிடிய ஆகிய பிரதேசங்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இதன் போது அக்கரை என்று அழைக்கப்படும் பாசல் தோட்ட, பெந்தோட்டப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றையும் இனவாதக் கும்பல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. பெந்தர எல்பிட்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட இப்பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக 10 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இனவாத வன்முறை நடைபெற்ற குறித்த தினத்தில் இங்கு வாழும் முஸ்லிம் மக்களை கொல்வதற்கு இனவாதக் கும்பல் வந்த நேரத்தில், தாம் சிங்கள அயலவர்களால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாக இங்கு வாழும் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
இனவாதக் கும்பல் இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களின் வீடுகளைத் தாக்க வந்தபோது இப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களையும் மீறி அங்குள்ள பள்ளிவாசல்களைத் தாக்கிச் சென்றுள்ளனர்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு சிங்கள மக்கள் தொடர்ந்தும் உதவி வருவதாகவும் ஆறுதல் கூறி வருவதாகவும் அப்பிரதேசத்தில் வசிக்கும் சிவில் பாதுகாப்பு உறுப்பினரான ரஸீன் என்பவர் தெரிவித்தார். இங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பினும் இனவாத நடவடிக்கையின் பின்னர் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடனேயே தமது அன்றாட பொழுதுகளைக் கழித்து வருகின்றனர்.
 
 
 ---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------

Post a Comment

0 Comments