அளுத்கம, தர்கா நகர், வலிப்பன்ன மற்றும் பேருவளைப் பிரதேசங்களிலுள்ள
முஸ்லிம்களின் எரிக்கப்பட்ட கடைகள் மற்றும் புடைவை தொழிற்சாலைகள்
என்பனவற்றில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தமது தொழில்களை
இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞர்கள் இதுவரை தொழிலை இழந்த நிலையில் காணப்படுவதாக சிங்கள தேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கடைகளில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எத்தனையோ
சிறு வியாபாரிகளும் தனது வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கடைகளில் பணியாற்றியவர்களின் மே மாதம் ஜூன்
மாதத்துக்கான சம்பளத்தைப் பெறாதவர்களும் இவர்களில் காணப்படுவதாகவும்
அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments