இனவாத அச்சுறுத்தல், இடப்பெயர்வு என
சொல்லொணாத் துண்பங்களை அனுபவித்து இன்றைய தினம் அமைதி நிலையுடன் பேருவளை
முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். ஆரம்பத்தில் ஜாமியா நளீமியாவில் குடியிருந்த
மக்களை அல்-ஹூமைசரா கல்லூரிக்கு மாற்றியிருந்த நிலையில் தற்போது அவர்களது
மீள் குடியமர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எமது
சகோதரர்கள் துரிதமாக இயங்கி வருகின்றனர்.
எனினும்
இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பொலிசில்
தனித்தனியாக முறையிடுவதற்கு முடிவாகியுள்ளது இதற்கான விஷேட ஏற்பாட்டினை
செய்து தரும்படி நேற்றைய தினம் டி.ஐ.ஜியுடனான சந்திப்பில் முஸ்லிம்
பிரதிநிதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படடுள்ளதால்
வீடுகளுக்கு திரும்ப முன்னதாக ஒவ்வொரும் பொலிஸ் முறைபப்பாட்டை மேற்கொள்வர்
என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகத்தின்
பாதுகாப்புக்காக அயாராது உழைத்த அனைத்து சகோதரர்களும் குறித்த
விடயத்திலும் மும்முரமாக இருப்பதனால் செயற்பாடுகளை தீவிரப்படுத்தி மீள்
குடியமர்வை துரிதப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன்
கொழும்பிலிருந்து மருந்துதவிகளும் கிடைக்கப்பெற்றதோடு தற்காலிக மருத்துவ
முகாம்கள் மூலம் மேலதிக சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
உணவுப் பதார்த்தங்களும் போதியளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் துரித
கதியில் செயற்பாடுகளை நிறைவு செய்யும் நோக்கில் சமூகப்பிரதிநிதிகள் இயங்கி
வருகிறார்கள்.
வரலாற்றின் கரும்
புள்ளியாக மாறியுள்ள 2014 கலவரத்தின் போது உடனுக்குடன் உங்களோடு
செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கான எமது மத்திய செய்தி சேகரிப்பு நிலையம்
பேருவளையிலிருந்தே இயங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.


0 Comments