சவூதியிலிருந்து ஜலீல் ஜீ-
அளுத்கம,பேருவல
பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற உயிரிழப்புக்கள்,
அசம்பாவிதங்கள் என்பவற்றைக் கண்டித்து சவூதி அரேபியா ஜித்தாவில் நேற்று (29-06-2014)
இலங்கைத் தொழிலாளர்களால் ஜித்தாவில் உள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்னால்
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பல கோஷங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு
இடம்பெற்றுள்ளது.
இக்கவனயீர்ப்பு
நிகழ்வில் மரணித்தவர்களுக்கு ஜனாஷாத்தொழுகையும் துஆப் பிரார்தனையும்
இடம்பெற்றதுடன் இலங்கைத்தூதரகத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
நன்றி: இம்போர்ட் மிரேர்





0 Comments