Subscribe Us

முஸ்லிம் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்.

இனாமுல்லாஹ் மசிஹுதீன்
தேசிய ஷூரா சபை, அவசர சேவை அமைப்பினர், இலங்கை முஸ்லிம் கவுன்சில் ,அகில இலங்கை ஜம்மியாதுல் உலமா மற்றும் ஏனைய அமைப்புக்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான உளர் உணவுப் பொருட்கள், மருத்துவ , மருந்து வகைகள் ,உணவுப் பொதிகள் , குடிநீர் என்பவற்றை உரிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்,
சில இடங்களில் அவர்கள் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுமுள்ளனர், இன்னும் சில இடங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகளை எதிர் கொள்கின்றனர், பொதுவாக குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு செல்ல அனுமதியும் மறுக்கப் படுகிறது.
தயவு செய்து உங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் மற்றும் அரச பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு படையினரின் வாகனங்களோடும் நிவாரண பணிகளுக்காக பேருவளை அளுத்கமை தர்கா நகர் ,களுத்துறை போன்ற இடங்களில் முகாமிடுமாறு உங்களை அவ்வப்பிரதேச தொண்டர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள்.!
மத்திய அரசிலும் பிராந்தியத்திலும் உள்ள சிங்கள தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒத் துழைப்புக்களையும் உங்களால் மாத்திரமே இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொடுக்க முடியும், அதனை சிவில் சன்மார்க்க மற்றும் பிராந்திய சமூக சேவை அமைப்புக்களால் பெற்றுக் கொள்வது சிரமமாகும். !

Post a Comment

0 Comments