Subscribe Us

பிரேசில்– சிலி மோதும் நாக் அவுட் போட்டி 28-திகதி நடக்கிறது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது ரவுண்டுக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. ‘ஏ’ பிரிவில் பிரேசில், மெக்சிகோ அணிகள் 2 வெற்றி, ஒரு டிராவுடன் தலா 7 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் பிரேசில் முதலிடத்தையும், மெக்சிகோ 2–வது இடத்தையும் பிடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறின. பிரேசிலின் கோல் வித்தியாசம் +5 ஆகும். (போட்ட கோல் 7, வாங்கிய கோல் 2). மெக்சிகோவின் கோல் வித்தியாசம் +3 ஆகும். (போட்ட கோல் 4, வாங்கிய கோல் 1).
குரோஷியா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளியும், கேமரூன் 3 தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறாமலும் வெளியேற்றப்பட்டன.
‘பி’ பிரிவில் நெதர்லாந்து 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சிலி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தையும் பிடித்து ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 3 தோல்வியுடன் புள்ளிகள் எதுவும் பெறாமலும், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரேசில் அணி 2–வது சுற்றில் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த சிலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 28–திகதி (இரவு 9.30) நடக்கிறது.
‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நெதர்லாந்து அணி 2–வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த மெக்சிகோவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் 29–திகதி ( இரவு 9.30) நடக்கிறது

Post a Comment

0 Comments