Subscribe Us

உயர்தரப் பரீட்சை 2013; இசெட் புள்ளியினை ஓகஸ்ட்டில் வெளியிட நடவடிக்கை

கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான இசெட் புள்ளி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அளவில் தலைமைத்துவ பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மாணவர்களை  பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments