Subscribe Us

முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசிடம் 'பிச்சைவேண்டாம் நாயைப்பிடி' என்பது போல..!

(றிசானா பசீர்)

இலங்கையில் நன்கு திட்டமிடப்பட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக் கெதிரான வன்படையணி முன்னேறிச் செல்கின்றது. உத்தியோகப் பற்றற்ற பொலிஸ் முன்னாலும் உத்தியோக பொலிஸ் பின்னாலும் தொடர்கின்றது. குற்றவாளி யார்? பின்னணி எது ? என்பதை முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்ட நேரம் வந்துவிட்டது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் அரசு படுதோல்வி என்ற அச்சம் பிடரிநரம்பை சுற்றிக் கொண்டுள்ளது. பௌத்த பிக்குகளை பகடைக் காடையாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட அரசு தத்தளித்தக் கொண்டிருக்கிறது. பௌத்த மதத்தை அரசியல் மயப்படுத்தி அரசியல் சுகம்கான அரச குடும்பம் ஏங்குகின்றது.

முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசிடம் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்பது போல சுருண்டு ஓடிவிட்டார்கள்.

இந்தப் பெண்டாட்டியை  எங்களுக்குத் தாருங்கள். உங்களுக்கு வேறு பொண்டாட்டி தருகின்றோம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா ?

இந்தச் சங்கிலி வடிவமான வன்முறை நீட்சிபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தில் இல்லை என்ற அர்த்தம் முஸ்லிம்களுக்கு நன்கு புரிகின்றது. இலங்கை ஜனாதிபதி முறைமை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாகும். இதன் சக்தியை இவல்லமையை ஒரே வார்த்தையில் சொன்னால் 'ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது. தவிர மற்ற எல்லாம் செய்யலாம்'. ஆகையால் பௌத்த பிக்குகளை அடக்குவது நிறைவேற்று அதிகாரத்தைப் பொறுத்தவரை ஒரு எளிய காரியம். குற்றவாளிகள் யார் என CCTV கமராக்களும் ஊடகங்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பு அரசிலுள்ள அண்ணன் தம்பிக் கூட்டத்தின் நேரடி வெறியாட்டமாகும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். கையாலாகாத தனத்தை எப்படிச்சமாளிக்கப் போகிறார்கள் ?

இந்த வன்முறை ஒரு தொடர் கதையாகும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி  வைத்தே ஆக வேண்டும். தமிழர்களை வேட்டையாடி முடித்தபின் முஸ்லிம்களைப் பந்தாட நினைக்கின்றார்கள். மஹிந்த தலைமையில் கோத்தபாயவின் நெறிப்படுத்தலில் முஸ்லிம்களுக்கெதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எந்தளவு ஒடுக்கப்படுகின்றதோ அந்தளவு வெடிக்கும் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். எலிக்கு மரணம் புனைக்கு விளையாட்டு என்பதைப் போல இது இருக்கின்றது. காதும் காதும் வைத்த படி பௌத்தபிக்குகளின் காதில் வன்முறைக்கான வழிகாட்டல் நடைபெறுகின்றது. 

இவ்வாறான நடவடிக்கைகள் ஒசாமா பின்லேடன்களையும் பிரபாகரன்களையும் நாட்டிலே உருவாக்கிவிடும் . இந்த நாட்டில் இன்னொரு இரத்த ஆற்றை ஓட்டி விடும்..

நான் புத்தரை நேசிக்கின்றேன். ஆனால் பௌத்த பிக்குகளை வெறுக்கின்றேன். ஏனெனில் புத்தர் போன பாதையில் பௌத்தர்கள் போகவில்லை.

மதமின்றிய விஞ்ஞானம் முடமானது. விஞ்ஞானம் இன்றிய மதம் குருடானது. விஞ்ஞானம் கற்கக்கற்க அது கடவுள் நம்பிக்கையை கூட்டிக்கொண்டே செல்லும். வேற்றுக்கிரக உயிரினம் பற்றிப் பேசப்படுகின்றது. ஆம். 'ஏழு வானங்களும் ஏழு புமிகளும் உண்டு என்றும் மறுமை நாளின் பொது சூரியன் மேற்கில் உதிக்கும் என்று திருக்குர்ஆன் முன்மொழிகின்றது '. இதை முழு விஞ்ஞானிகளும் ஒப்பக்கொள்கின்றனர்.

எது எவ்வாறெனினும், இறைஇல்லத்தை இடம்மாற்றுவது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதற்கு உடந்தையானவர்களை சமூகம் நிராகரிக்க வேண்டும். இப்புனிதம் கெட்டவர்கள் பள்ளிவாசல் படிகளை மிதிக்கக் கூடாது. பதவிகளை ராஜினாமாச் செய்தால் ஒழிய.

மதசுதந்திரம் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன் ? நீங்கள் நீதி அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? நீங்கள் எல்லோரும் அரசியல்வாதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதில் என்ன பயன்? முஸ்லிம்களுக்கு தலைமைதாங்கும் பொருத்தப்பாடு குறைந்து கொண்டே செல்கின்றது.

“Question with boldness , Even the existence of a God “ பௌத்தமத அடிமைகளாக இந்நாட்டில் வாழமுடியாது. மதசுதந்திரத்தை யாரும் மறுக்கவும் முடியாது. அறிவுள்ள சமூகத்தில்தான் சுதந்திரம் நிலவ முடியும். கல்வி அறிவு குன்றிய மக்கள் மற்றவர்களுடைய உரிமைகளை அறிந்து கொள்ள மாட்டார்கள்.

எந்நேரமும் எந்த நாளும் மத சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும். ஒரு யுத்தத்தைப் போன்று அமைதியாக அதை நாம் வென்றெடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments