Subscribe Us

''கேவலமானதாகும்''

அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் இருந்து கொண்டே முஸ்லிம் எம்பீக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது தினமும் கூட இருக்கும் மனைவியுடன் பேச அடுத்த வீட்டுக்காரனை தனது மனைவிக்கு கடிதம் எழுதச்சொல்வது போன்ற கேவலமானதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,


முஸ்லிம் எம்பீக்கள் ஒன்று பட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது இது முதற்தடவை அல்ல. எப்போது தாங்கள் கையாலாகாதவர்கள் என்பது மக்களுக்கு தெரியவருகிறதோ அப்போது தாங்கள் ஒன்று படுவது போல் மக்களுக்கு காட்டி இவ்வாறு மக்களை ஏமாற்றுவது முஸ்லிம் கட்சிகளின் வழமையான நடவடிக்கையாகும். கடந்த வருடம் மஹியங்கனை பள்ளி மூடப்பட்ட போது அனைத்து எம்பீக்களும் ஒன்று பட்டு இது விசயமாக பேச ஜனாதிபதியிடம் பேச நேரம் கேட்டிருந்தனர். ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டே கொஞ்சம் கூட வெட்கமின்றி ஏதோ தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கடிதம் எழுதினார்கள். கடைசியில் அந்த கடிதத்துக்கு ஒரு பதில் கூட வரவில்லை. இதற்கான பதில் வராமைக்கான காரணம் இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அத்தோடு மஹியங்களை பள்ளி பிரச்சினையையும் முஸ்லிம் சமூகம் மறந்து விட்டது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு கட்சி இலகுவில் ஜனாதிபதியை சந்திக்க முடியாது என்பதால் அக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழதுவதில் நியாயம் உண்டு. ஆனால் அரசின் அமைச்சர்களாக அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு ஜனாதிபதியுடன் அனைத்து இடங்களுக்கும் சுற்றிக் கொண்டே முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்லாமல் கடிதம் எழுதுவது மிகப்பெரிய நகைச்சுவையும் அப்பாவி முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதுமாகும். 

ஆகவேதான் நாம் சொல்கிறோம்,  இவ்வாறு  கடிதம் அனுப்பி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு முஸ்லிம்கள் பிரச்சினையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டிருந்தால் அனைத்து எம்பீக்களும் ஒன்று சேர்ந்து பொதுபலசேனாவையும் அதற்கு ஊக்கமளிக்கும் அரசாங்கத்தையும் கண்டித்து பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்த முன்வர வேண்டும். இவ்வாறான கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய இவர்களுக்கு முடியாவிட்டால்  கல்முனையில் இதற்கான பகிரங்க மேடை ஓன்றை ஏற்பாடு செய்து தர நாம் தயாராக இருக்கிறோம். முஸ்லிம் எம்பீக்கள் கலந்து கொள்ள தயாரா என்பதை அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை

Post a Comment

0 Comments