அண்மையில் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்துக்கு மாறிய செய்தி எல்லா வலைதளங்களிலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. அதன் பிறகு நாளடைவில் அச் செய்தி மறைந்தே போய்விட்டது.
 
தற்போது திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்து வரும் ஜெய் மீது சினிமா வட்டாரங்களின் பார்வை திரும்பியுள்ளது.
 
ஜெய் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று கடந்த ஒரு வாரமாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
 
இதைப்பற்றி  ஜெய் கூறிய போது, நான் பிறப்பால் இந்து ஆனால் எனக்கு முஸ்லீம் மதத்தின் கொள்கைகள் பிடித்திருந்ததால்அதை பின்பற்றினேன்.
 
அவ்வளவுத்தான், மற்றபடி நான் முஸ்லீமாகி விட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று ஜெய் கூறினார்.