வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர்
விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் காலி ஆகிய
பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் இரண்டில் மண்ணென்னை கலக்கப்பட்ட குடிநீர்
போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார
குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகள் இரண்டில் மண்ணென்னை கலக்கப்பட்ட
குடிநீர் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குடிநீர்
போத்தல்களில் ஏனைய இரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் விசேட சுற்றிவளைப்புகள்
மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார
சுட்டிக்காட்டினார்.

0 Comments