(தாஸிம் ஜப்பார்)
சமூக சிந்தனைகளின் எழுச்சிக்கும் ஒழுக்க விழுமியங்களின் வளர்ச்சிக்கும் வித்திட்ட சமயங்களின் முதலிடத்தில் இருப்பது இஸ்லாமிய சமயம் என்பதில் எள்ளளவூம் சந்தேகமில்லை. கட்டுக்கோப்புடனும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின வழியைப் பின்பற்றி வாழ்ந்த சமுதாயம் இன்று பல இயக்கங்களாக பிளவு பட்டு சின்னாபின்னமாகி முஸ்லிம் சமூகத்தின் முகவரியை ஏலம் விடக் கூடிய தூரதிஷ்டவசமான நிலையில் காணப்படுவதை நாம் கண்ணூடாகக் காண்கின்றௌம்.
இவ் இயக்கங்களினால் எம் சமூகம் அடைந்துள்ள பின்னடைவுகளை பொறுப்பேற்கக் கூடியவர்கள் யார்? இஸ்லாமிய அகீதாக் கொள்கைளில் சில சில மாற்றங்களை மாத்திரம் செய்து தங்களுக்கென ஓர் கொள்கையையும் அவற்றை வளர்ப்பதற்காக தன்னால் இயன்றளவு செயற்பாடுகளில் ஈடுபட்டு தம் சமூகத்துக்குள்ளும் தங்களின் குடும்பத்திற்குள்ளும் பிளவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் வழிகோலி மற்றைய சமூகங்கள் ஏளனமாகப் பார்க்கக்கூடியளவுக்கு மாற்றியது இந்த இயக்கங்களாகும்.
சமூக வலைத்தளங்களின் எம் அருமைச் சகோதரர்களின் வார்த்தைப் பிரயோகங்களும் அவர்களின் காரசாரமான நாகரீகமற்ற விவாதங்களும் எம் சமூகத்தின் தற்கால தறிகெட்ட நிலமையை வெளிக்காட்டுகின்றது. ஓவ்வொரு கொள்கைகளையூம் தங்களின் உயிராகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கங்கள் தங்களின் இருப்பை வலியுறுத்துவதற்காக தூய மார்க்கமான இஸ்லாம் கற்பித்த பொறுமை தன்னடக்கம் போன்ற இதர குணங்களை தூர வீசிவிட்டு இயக்க வெறியின் உச்சத்தில் நின்று கொண்டு இஸ்லாமிய வரையறைக்கு அப்பால் தமது பாதையை அமைத்துக்கொள்வதை காணக் கூடியதாவே உள்ளது.
மாற்று சமயத்தவரையும் கண்ணியம் செய்ய அறிவுறுத்திய எம் மார்க்கத்தில் இன்று ஈமான் கொண்ட எம் சகோதரர்களையே தூசித்தும் வஞ்சித்தும் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பல வகையான இன்னல்களையும் பகிரங்கமாகவே செய்யத் துணிந்துள்ளனர். அது மடடுமன்றி மார்க்கத்தைக் கற்ற அறிஞர்கள் தாம் கற்ற கல்வியின் பெறுமதியை அறியாது நினைத்ததற்கெல்லாம் மார்க்கத்தை விற்று வயிறு பிழைக்கக் கூடிய இழி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நம் இயக்க வெறியின் பிந்திய வெளிப்பாடே எம்மை தற்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தின் ஒரு சில நாசகார சக்திகளாகும் என்பதை நாம் ஏற்காமல் இருக்க முடியாது.
மாற்று சமூகத்தையூம் அவர்களின் சமயங்களையூம் மதித்து வாழ்ந்த நம் சமூகமே இன்று நாட்டில் பல இன்னல்களை எதிர்நோக்கி இருப்பதற்கு இந்த இயக்க வெறியூம் ஓர் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எம் ஒற்றுமையை குலைப்பதற்கு கடந்த காலங்களில் யூத தீய சக்திகள் வழிகளை மேற்கொண்டு வரலாறுகளையே மாற்றிய சம்பவங்கள் எமக்குத் தெரிந்த ஒன்றே. அதே வழியில் எம் ஒற்றுமையை குலைப்பதற்கும் எம் பலத்தை இல்லாமல் செய்வதற்கும் இவ்வாறான இயக்கங்களைத் தோற்றுவித்து எம்மை மீண்டும் இன்னல்களுக்குட்படுத்த முற்படுகின்ற நாசகார சக்திகளிடமிருந்து எம்மையும் எம் எதிர்கால சமூகத்தையும் காப்பாற்ற வல்ல அல்லாஹ்வின் துணையோடு விழித்தெழவேண்டிய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றௌம்.
இவ் இயக்கப் போதைச் சேற்றில் நடப்பட்ட நாற்றுக்களாய் நாம் வாழும் வரை எம் சமூகத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் ஒரு போதும் முன்னேற்றமடையப் போவதில்லை என்பது திண்ணமே. இறைவனின் இரு கையேந்துவதன் மூலம் எம் சமூக ஒற்றுமைக்கு விடிவு கிடைக்க பிரார்த்திப்போம். ஓன்றுபடுவோம்.

0 Comments