1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.
1920:சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.
1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ்
நகரில் நடைபெற்றது. 1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1945:இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் சாதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.
1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்;.
1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு
அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன்
அதிகாரிமளித்தார்.
1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு
கிளர்ச்pயாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு,
கொல்லப்பட்டார்.
2001: அமெரிக்க கோடீஸ்வரர் டென்னிஸ் டிட்டோ முதலாவது விண்வெளி சுற்றுலா பயணியானார்.
2008: சீனாவில் ஷான்டோங் நகரில் ரயில் விபத்தொன்றில் 72 பேர் பலியாகினர்.

0 Comments