Subscribe Us

குருணாகல் ரயில் விபத்தில் 20 பேர் காயம்

குருணாகல்- பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
 
வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரெஜின ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
 
இன்று காலை 8.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
 
விபத்தில் காயமடைந்த 20 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments