பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபத்துக்கு 20 கிரிக்கட் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு 1.5மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்க இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
இன்று காலை (04) அவசரமாக கூடிய உயர்மட்டக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பங்குபற்றியமைக்கான தொகை 500. 000 அமெரிக்க டொலரும் வெற்றியீட்டியமைக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருமாக மொத்தம் 1.5மில்லியன் டொலர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments