Subscribe Us

header ads

முஹம்மது அம்மாரை காணவில்லை.

மட்டக்களப்பு புணாணை ஐயந்தியாய என்னும் கிராமத்தை வதிவிடமாகவும், பேருவளை அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியை கற்று வந்த முஹம்மது உவைத் முஹம்மது அம்மார் (வயது 16) என்பவரைக் காணவில்லை.

இவர் கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து கல்வி கற்கும் பேருவளை அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரிக்கு தனது விடுமுறை முடிந்து சென்றவர் இன்னும் அங்கு போய் சேரவில்லை என்று மதரசா நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பெற்றோரும், உறவினர்களும் தேடியும் தகவலும் கிடைக்காத நிலையில் செவ்வாய்கிழமை வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இப்புகைப்படத்தில் உள்ள மாணவனை அடையாளங் கண்டவர்கள் 0776146581, 0757701076  என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Post a Comment

0 Comments