Subscribe Us

header ads

பெண்ணின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த உயர்தர மாணவர்கள்

புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை தோண்டியெடுக்க முயற்சித்த மாணவர்களில் ஒருவரை கிராமவாசிகள் பிடித்து வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

வெலிமடையை சேர்ந்த பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவர்களில் ஒருவரே கிராமவாசிகளால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவராவர்.வெலிமடை புகுல்பொல பொது மயானத்தில் 24ஆம் திகதி 94வயதுடைய பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டது. இச்சடலமே இருதினங்களுக்கு பின் மாணவர்களினால் தோண்டி எடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வித்தியாலயத்தின் விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் எட்டுப்பேர் சடலத்தை தோண்டியெடுக்க முயற்சித்த போதிலும் கிராமவாசிகள் அங்கு கூடியதினால் ஏழு மாணவர்கள் ஓடி தப்பினர். மற்ற மாணவன் மதுபோதையில் இருந்தமையினால் ஓடி தப்ப முடியாமல் கிராமவாசிகளினால் பிடிபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார். மேலும், சடலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வித்தியாலயத்தின் விஞ்ஞானப்பிரிவினரால் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஆய்வு கண்காட்சியில் வைக்கப்பட விருந்த மனித சடல ஆய்வுகளுக்காவே இச்சடலம் தோண்டி எடுக்க முயற்சிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய மாணவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.

Post a Comment

0 Comments