Subscribe Us

header ads

வீட்டுக்கு இரவில் தானே வர வேண்டாம், பகலில் வந்தாலென்ன? பூவரசங்குளத்தில் இராணுவத்தினர்

வவுனியா பூவரசங்குளத்தில் பெண்கள் தனித்து இருக்கும் வீடுகளுக்கு நள்ளிரவு வேளைகளில் இராணுவத்தினர் சென்று வீட்டுக்கதவுகளை தட்டி பெண்களின் பாதுகாப்புக்கும், சூழல் அமைதிக்கும் ஊறுவிளைவித்தமை தொடர்பாக கடந்த 28.01.2014 அன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை நீங்கள் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்தவாரம் பூவரசங்குளம் கிராம அலுவலரிடம் சென்ற இராணுவத்தினர் ‘யார் இந்த செய்தியை வெளியிட்டது… ? உனக்கு தெரியாமல் இருக்க முடியாது. நீ தானே இங்கத்த கிராம அலுவலர். ஊருக்குள்ள யார் யார் வருகினம் போயினம் என்று நீ பாக்கிறது இல்லையா? கந்தன்குளத்தில என்ன நடக்குது என்று உனக்கு தெரியாதா?’ என்று அதிகாரத்தோரணையில் விசாரணை செய்து விட்டு போயுள்ளனர்.

அதன் பின்னர் கந்தன்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவரை அழைத்து, ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கிராம அலுவலர் விசாரித்த போது, அவர் நடந்த சம்பவத்தையும், அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் தானும் ஒருவர் என்பதையும் கூறியுள்ளார்.

தற்சமயம் இராணுவத்தினர், போலிக்கு கையில் ஒரு பைல் அல்லது கொப்பி ஒன்றை தூக்கிக்கொண்டு, ‘எங்கட நிதியிலிருந்து (இராணுவ பட்ஜெட்) வீட்டுத்திட்டம் தரப்போகிறம். அதுக்கு பதிவெடுக்க வந்திருக்கிறம்.’ என்று கூறிக்கொண்டு, பகலில் வீடுகளுக்கு வந்து விடுவதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அங்கு ஒருவித அச்சம் மற்றும் பதற்றத்துடன் பெண்களும், குழந்தைகளும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

Post a Comment

0 Comments