ஹுமைஸராவின்
பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள MIZANZA Twenty14 இன்று
பெப்ரவரி 28, மார்ச் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது.
இக்
களியாட்ட விழாவில் சென்ற வருடங்களைப் போன்று இவ்வருடமும் பழைய மாணவர்களும்
பாடசாலையின் மாணவர்களும் இணைந்து நடிக்கும் “ஆச தோச” எனும் தலைப்பில்
நகைச்சுவை கலந்த சமூக நாடகம் மேடையேறவுள்ளது.
மூன்று காட்சிகளாக “ஆச தோச” மேடையேற உள்ள நேரம் வருமாறு
-
பெண்களுக்கான காட்சி
பெப்ரவரி 28, மார்ச் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மாலை 4:00 மணிக்கும்
-
ஆண்களுக்கான காட்சி
பெப்ரவரி 28, மார்ச் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் இரவு 8:30 மணிக்கும்
-
மாணவர்களுக்கான காட்சி
மார்ச் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மாலை 2:30 மணிக்கும்
பெண்கள், ஆண்கள், மாணவர்கலுக்கான நேரங்களை வெவ்வேறாக ஒதுக்கியுள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு கூறிக்கொள்கிறோம்.
2010 இல் கண்ணீர் அஞ்சலி,
2011 இல் போராட்டம்,
2012 இல் நண்பன்
என
தொடர்சியாக மூன்று நகைச்சுவை கலந்த சமூக நாடகங்களை வழங்கிய நாம் இவ்வருடம்
2014 இல் முற்றிலும் வித்தியாசமான கருப்பொருளில் பல திறமையான மாணவர்களின்
நடிப்பில் “ஆச தோச” நாடகம் மேடையேறவுள்ளது.
பாடசாலையின்
கல்வி, கலை, கலாசாரம், பாரம்பரியம், விளையாட்டு, அபிவிருத்தித்
திட்டங்கள், மற்றும் நிர்வாகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான மேலதிக
நிதியினை திரட்டிக் கொள்ளும் மாபொரும் ஒரு வேலைத்திட்டமாக நான்காவது
வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நடாத்த பழைய
மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி பாடசாலையின் வெற்றிக்கு உதவுமாறு
ஹுமைஸரியர்கள் அனைவரையும் வேண்டிக்கொண்டு இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு
உங்களால் முடிந்த பங்களிப்பை நல்குமாரும் வேண்டிக்கொள்கிறோம்.
குறிப்பு : பெண்களுக்கான நேரத்தில் ஆண்கள் வருவதும் ஆண்களுக்கான நேரத்தில் பெண்கள் வருவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நன்றி (PX Online)
0 Comments