Subscribe Us

'புத்தாண்டில் எனக்கு கிடைத்த முதல்செய்தியே 'எனது சாதனை முறியடிக்கப்பட்டது' என்பதுதான்"

இந்த புது­வ­ரு­டத்தில் எனக்கு கிடைத்த முத­லா­வது செய்­தி­யானது எனது 17
வருட சாத­னையை முறி­ய­டித்­தது பற்­றி­யாகும் என குறைந்த பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து சதம் அடித்த சாத­னைக்கு நேற்றுவரை சொந்­தக்­கா­ர­ராக இருந்த பாகிஸ்தான் அணியின் நட்­சத்­திர கிரிக்கெட் வீரர் ஷயீட் அப்­ரிடி தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
நான் ஓய்­வு­பெறும் வரை எனது சாத­னையை யாரும் முறி­ய­டிக்க மாட்­டார்கள் என நினைத்­தி­ருந்தேன். ஆனாலும் நியூஸி­லாந்து விரர் கொரி அண்டர்சன் முறி­ய­டித்­துள்ளார்.
 
கொரி அண்டர்சனின் பெயரை இதற்கு முதல் கேள்­வி­ப்பட்­டதே கிடை­யாது. இந்­நி­லையில் என் உற­வினர் ஒருவர் நேற்று காலை எனக்கு இந்த செய்­தியை சொன்னார்.
 
இரு­ப­துக்கு 20 போட்­டிகள் இருக்­கின்ற கார­ணத்தால் குறைந்த பந்­து­க­ளுக்கு முகம் கொடுத்து சதத்தை கடந்­தவர் என்ற சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments