அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மூன்றே நிமிடங்களில் இரண்டு கிலோ
இறைச்சியை உண்டு புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் மாலி
ஸ்குயிலர், இவர் கடந்த 3ம் திகதி போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2
கிலோ ஸ்டீக் என்ற மாட்டிறைச்சியை மூன்று நிமிடங்களில் சாப்பிட்டு புதிய
சாதனை படைத்துள்ளார். இதுவரையிலும் மூன்று கிலோ இறைச்சியை 6 நிமிடம் 48
விநாடிகளில் சாப்பிட்டது தான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments