Subscribe Us

காலாவதியான மருந்துக்கு புது திகதி குறித்த மருந்து நிறுவனம் முற்றுகை


நாவல கிரிமண்டல மாவத்தையில் தனியார் மருந்து இறக்குமதி நிறுவனம் ஒன்று பாணந்துரை-வலான மோசடி தடுப்பு பிரினரால் சுகாதார அமைச்சின் வைத்திய தொழிநுட்ப பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

காலாவதியான மருந்து வகைளுக்கு திகதி மாற்றும் நடவடிக்கை இங்கு இடம்பெற்று வந்ததாகவும் அவ்வாறு செயற்பட்ட இருவரை கைது செய்துள்ளதாகவும் ´ஹைட்ரோஜோன் ஒயின்மென்ட்´ என்ற மருந்து பெட்டி 4814 மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் மருந்து சேகரிக்கப் பயன்படும் திகதி மாற்றப்பட்ட குழாய்கள் 10000 மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் மற்றும் மூன்று சேவையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இவ்வாறு நோயாளர்களுக்கு மருந்துகளை தரக்குறைவாக வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

(நன்றி:அத தெரண)

Post a Comment

0 Comments