ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை நிர்வாக சபை உறுப்பினர்களின் மாநாடு நேற்று (18) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
 
 நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பெரும் திரளான உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
  

இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாக எதிர்க் கட்சியினரால் பரப்பப்ட்டுள்ள தகவலில் உண்மையில்லை என்று கூறினார்.