Subscribe Us

மாணவியை அறைந்த அதிபர் கைது


மாணவிக்கு அறைந்த பாடசாலை அதிபரொருவரை உடதலவின்ன பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

எட்டு வயது பாடசாலை மாணவியொருவரின் காது பாதிக்கும் வகையில் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக உடதலவின்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்தே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிபர் உடதலவின்ன பிரதேசத்தில் நடத்துகின்ற மேலதிக வகுப்பிலேயே குறித்த மாணவி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வத்துகாமம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடதலவின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments