Subscribe Us

ஒருநாள் கிரிக்கெட் தரப்படுத்தலில் கோஹ்லி, சயீட் அஜ்மல் முன்னிலை

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் மிகவும் அபா­ர­மாக ஆற்­றல்­களை
வெளிப்­ப­டுத்தி வரும் இந்­தி­யாவின் விராத் கோஹ்லி, சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்டத் தரப்­ப­டு­தலில் முதலாம் இடத்தை எட்­டிப்­பி­டித்­துள்ளார். கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்­கையில் முதலாம் இடத்தைப்  பிடித்­தது இதுவே முதல் தட­வை­யாகும்.


பாகிஸ்­தானின் சுழல்­பந்­து­வீச்­சாளர் சயீட் அஜ்மால் பந்­து­வீச்சு தரப்­ப­டுத்­தலில் இரண்டு இடங்கள் முன்­னேறி முதலாம் இடத்தை அடைந்­துள்ளார்.


துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலாம் இடத்­தி­லி­ருந்த தென் ஆபி­ரிக்­காவின் ஹஷிம் அம்லா இரண்டாம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ள­துடன் 9ஆம் இடத்­தி­லி­ருந்த அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஜோர்ஜ் பெய்லி 6 இடங்கள் மூன்­னேறி 3ஆம் இடத்­தி­லுள்ளார்.


சர்­வ­தேச ஒரு நாள் போட்டி வாசனை போதி­ய­ளவு இல்­லாத நிலையில் குமார் சங்­கக்­கார ஒரு இடம் பின்­தள்­ளப்­பட்டு நான்காம் இடத்­தி­லுள்ளார்.


ஷிக்கார் தவான், ரோஹித் ஷர்மா ஆகி­யோரும் வெகு­வாக முன்­னேறி முறையே 11ஆம், 15ஆம் இடங்­களை அடைந்­துள்­ளனர். இந்­திய அணித் தலைவர் மஹேந்த்ர சிங் டோனி 6ஆம் இடத்தில் உள்ளார்.


பந்­து­வீச்சில் முதல் இரண்டு இடங்­க­ளி­லி­ருந்த மேற்­கிந்தித் தீவு­களின் சுனில் நாரய்ண், இந்­தி­யாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடங்­க­ளுக்கு பின்­தள்­ளப்­பட்­டுள்­ளனர். இங்­கி­லாந்தின் ஸ்டீவன், இலங்கையின் ரங்கன ஹேரத் ஆகிய இருவரும் முறையே 4ஆம், 5ஆம் இடங்களிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.     
                              

Post a Comment

0 Comments