இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல்
ஜோன்சன் பந்து வீச்சில் மிரட்ட, அவுஸ்திரேலிய அணி 381 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
அணி, 5 போட்டிகள் கொண்ட வரலாற்று முக்கியத்துவமிக்க ஆஷஷ் டெஸ்ட் தொடரில்
பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி
பிரிஸ்பேனில் இடம்பெற்றது.
இப் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 136
ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது
இன்னிங்ஸிற்காக 2 விக்கெட்டுகளை இழந்து 24 ஓட்டங்களை எடுத்து, 537
ஓட்டங்களால் பின்தங்கியிருந்தது.
இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்களுடன்
களமிறங்கிய இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து வந்த
வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 179 ஓட்டங்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 381 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சர்பில் ஜோன்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஜோன்சன் தெரிவுசெய்யப்பட்டார்.


0 Comments