சில வாரங்களுக்கு முன்னர் பீஜிங் நகரில் ஒரு தொடர்மாடி கட்டடத்திற்கு
மேலே மலை போன்ற அமைப்பினை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியமை தொடர்பிலான
செய்திகளை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் தற்போது ஷெய் ஆங்
மாகாணத்தில் உள்ள விவசாயி ஒருவர் தனது வீட்டின் கூரைக்கு மேலே விவசாய நிலம்
ஒன்றினை உருவாக்கி பயிர் செய்துவருகின்றமை அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
120 சதுர அடி கொண்ட இந்த நிலத்தில் 400 கிலோகிராம்
வரையான தர்ப்பூசணியினைக் கூட (வாட்டர் மெலன்) அறுவடை செய்திருக்கின்றாராம்
அந்த விவசாயி.




0 Comments