Subscribe Us

அனைவருக்குமான எச்சரிக்கை. ! பேஸ்புக்கில் மானத்தை கப்பலேற்றும் வைரஸ்.

சமூக வலைத்தளங்களில் (சுமார் 1.10 பில்லியன் பாவனையாளர்களுடன்) முதன்மை தளமாக வலம் முகநூலில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வகையான வைரஸ் பாவனையாளர்களை சோதிப்பது வழமை.


தற்போது சுமார் ஒருவாரமாக முகநூல் பாவனையாளர்களின் பெறும் தலையிடியாக இருப்பது மேலே படத்தில் உள்ளது போன்ற வைரஸ். 

இந்த வைரஸ் நாம் இணைந்துள்ள முகநூல் Group களில் சம்பந்தமே இல்லாத ஒரு முகநூல் பாவனையாளர் மூலம் பதிவேற்றம் செய்யபட்டு தமது பப்ளிக் நியுஸ் பீட் இல் காட்டப்படுவதால் கடும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பிட்ட வைரஸ் தொடர்பில் பேஸ்புக் நிறுவனமும் பலவகையான முயற்சிகளை எடுத்து தடுக்க முனைந்தாலும் இன்று வரை இவை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பலரும் அறிந்ததே.

இவற்றை தவிர்ப்பது எவ்வாறு
மேற்குறிப்பிட்ட வைரஸ் உங்கள் நியுஸ் பீட் இல் காட்டப்படும் போது மேலதிக படங்களை பார்க்க இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணவும் என ஒரு இணைய லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த லிங்க் தவறுதலாக கிளிக் செய்யப்பட்டால் கூட அடுத்த வினாடியே உங்கள் பெயரில் நீங்கள் இணைந்துள்ள Group களில் அனைவருக்கும் நீங்கள் ஆபாசமான புகைப்படம் (வீடியோ) ஒன்றை தரவேற்றியதாக காட்டும். அத்துடன் அதனை நீக்குவதும் அவ்வளவு சுலபமமில்லை.

மேலும் இவை பற்றி ஏற்கனவே முகநூல் நிறுவனத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதால் நீங்கள் Report இணைப்பு மூலம் இதனை முறைப்பாடு செய்யவும் முயல வேண்டாம். அதுவும் ஒருவேளை  நீங்கள் இணைந்துள்ள Group களில் அனைவருக்கும் நீங்கள் ஆபாசமான புகைப்படம் (வீடியோ) ஒன்றை தரவேற்றியதாக காட்ட வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை.

Post a Comment

0 Comments