தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர்கள் இருவர் பிரகாசித்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களைப்பெற்றது.
தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அன்வர் அலிதான் அவ்வணியின் சார்பில் கூடுதலான ஓட்டங்களைப்பெற்றார். அவர் 9 ஆவது வரிசை வீரராக களமிறங்கி 55 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
அவருக்கு அடுத்தாக மற்றொரு அறிமுக வீரர் பிலாவல் பாத்தி 24 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றார.
219 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு பாகிஸ்தான் அணியின் மற்றொரு அறிமுக வீரர் பிலாவல் பாத்தி கடும் அச்சுறுத்தலாக அமைந்தார். அவர் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேவேளை அன்வர் அலி துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அன்வர் அலி பந்துவீச்சிலும் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அன்வர் அலி தெரிவானார்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 2 ஆவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

0 Comments